அதிலும் குறிப்பாக பனிக்காலத்தில் உதடுகள் வறண்டு, வெடித்து பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்.
அதில் சிலர் உதடுகளை நாக்கால் எச்சிலால் ஈரப்படுத்திக் கொள்வார்கள். அது இன்னும் தவறானது. எச்சிலில் உள்ள அமிலத்தன்மை
உதடு வெடிப்பை இன்னும் மோசமாக்கும். அதற்கு கீழ்வரும் முறைகளில் வீட்டில் உள்ள பொருள்களை வைத்து எளிமையாக லிப் பாம் செய்து பயன்படுத்துவ தேன் மெழுகு ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அதில் செவ்வந்தி ஊறவைத்த எசன்ஷியல் ஆயில் (கேலன்டூலா ஆயில்) மார்க்கெட்டுகளில் கிடைககும். இந்த இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கி, இறுக்கமான கண்ணாடி பாட்டிலில் போட்டு மூடி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் உதடுகளில் அப்ளை செய்து வர, உதடு வெடிப்புகள்
நீங்கி, மென்மையாகும்.நம் முன்னோர்கள் குளிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் பனி வெடிப்பு, தோல் வறட்சி ஆகியவற்றைப் போக்க தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வார்கள். குறிப்பாக
உதட்டு வெடிப்புக்கு தேங்காய் எண்ணெயை அப்ளை செய்வார்கள். ஆனால் வெறும் தேங்காய் எண்ணெய் அப்ளை செய்வது உதட்டைக் கருமையாக்கும் என்று mythம் இருக்கிறது.ஆனால் தேங்காய் எண்ணெயுடன்
தேன் சேர்த்துக் கலந்தால் சூப்பரான நேச்சுரல் லிப் பாம் தயார். இதை அப்ளை செய்யும்போது உதட்டுக்குப் போதிய நீர்ச்சத்து கிடைப்பதோடு
நல்ல மாய்ஸ்ச்சராகவும் வைத்திருக்க உதவி செய்யும்.2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்க்கு ஒரு ஸ்பூன் தேன் என்கிற விதத்தில் கலந்து வைத்து அப்ளை செய்யுங்கள்.