இரானின்
சிஸ்தான்-ஓ-பலுசிஸ்தான் மாகாணத்தில்
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்கள் இரானின் தாக்குதலுக்கு எதிரான பதிலடியாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து
தகவல் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், 'மார்க் பார் சர்மாச்சார்' என்ற பெயரில் பயங்கரவாதிகளை குறிவைத்து தங்களது இராணுவம் தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளது.
நிபுணர்களின்
கூற்றுப்படி, ‘இரானில் இருக்கும் பாகிஸ்தான் பகுதியை சேர்ந்த பயங்கரவாதிகள் தங்களை சர்மாச்சர் என்று அழைத்துக்கொள்கின்றனர்.’
'மார்க்
பார் சர்மாச்சார்' என்பது இரானில் வசிக்கும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கான பிரச்சாரமாகும்.
“தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ள அனைவரும் பாகிஸ்தானில் பலரும் ரத்தம் சிந்த காரணமான மற்றும் இரானில் தங்களது கட்டுப்பாட்டில் யாருமே இல்லாத பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ள பயங்கரவாதிகள்,” என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும்,
இந்த பயங்கரவாத அமைப்பு தொடர்பான தகவல்களை பலமுறை இரானுடன் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் அவை இரானால் புறக்கணிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. அதனால்தான் வியாழக்கிழமை காலை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது பாகிஸ்தான். இதற்கு முன்னதாக செவ்வாயன்று, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தது இரான். அதற்கு காரணமாக ஜெய்ஷ் அல்-அட்ல் என்ற போராளிகள் அமைப்பின் மறைவிடங்களே தங்களது இலக்கு என்று கூறியது. இந்த அமைப்பு பாகிஸ்தானில் இருந்தபடியே இரானுக்கும் தீவிரவாத செயல்களை செய்து வருவதாக தெரிவித்தது இரான்.
இரான்
சிஸ்தான் - பலுசிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாத தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த ஒரு அமைப்பின் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
இருப்பினும்,
அதன் இலக்காக பலுசிஸ்தானின் ஆயுதக்குழு அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆனால்,
பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் தங்களது அமைப்பு இரானில் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டது.
அதன்
செய்தித்தொடர்பாளர் ஆசாத் பலோச் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரான் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் பி.எல்.ஏ
அமைப்பு இல்லை. பாகிஸ்தான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
"இரான் ஆக்கிரமிப்பு
பலுசிஸ்தானில் (மேற்கு பலுசிஸ்தான்) உள்ள பிஎல்ஏ மற்றும் பிற விடுதலைக்கான ஆதரவு அமைப்புகளை தங்களது படைகள் குறிவைத்துள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. பாகிஸ்தானின் இந்த தகவல்களை பிஎல்ஏ நிராகரிக்கிறது," என்று கூறியுள்ளார் ஆசாத் பலோச்.