‘சலார்’ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது வெளியாகிறது தெரியுமா? - Eelatheepam Sri Lankan Breaking NEWS

‘சலார்’ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்போது வெளியாகிறது தெரியுமா?

 

. alaar OTT Release in Netflix Tamil: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், 22ஆம் தேதி வெளியான படம் சலார். ரசிகர்களால் ‘ரிபல் ஸ்டார் என்று அழைக்கப்படும்

 எதிர்பார்ப்பை தூண்டிய இப்படம், திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்று வசூலையும்

 குவித்தது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கே.ஜி.எஃப் 1 மற்றும் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களை இயக்கி, பான் இந்திய

அளவில் மிக பிரபலமாக உயர்ந்த இயக்குநர் பிரசாந்த் நீல். இவரது அடுத்த பெரிய ரிலீஸாக வெளியான படம்தான் சலார். இந்த படத்தில் பிரபாஸ் உடன்

இணைந்து ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ் சுகுமாரன், ஸ்ரியா ரெட்டி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சில நாட்களுக்கு முன்பு

திரையரங்குகளில் வெளியான போது, இப்படத்திற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது

ஆனால், அதற்கு நேர் மாறாக தமிழகத்தில் இப்படம் தோல்வியடைந்தது.

மாபெரும் பட்ஜெட் திரைப்படம்..

 


நடிகர் பிரபாஸ் முதன் முதலில் நடித்த பெரிய பட்ஜெட் திரைப்படம்

பாகுபலி. இந்த படத்திற்கு பிறகு, இவரை தேடி வந்த பட வாய்ப்புகள் அனைத்துமே 100 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில்தான் இருந்தன

ராதே ஷ்யாம், சஹோ, ஆதி புருஷ் உள்பட அனைத்து படங்களுமே 200 கோடிக்கும் மேற்பட்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டன. அந்த வகையில்

சலார் படமும் சுமார் ரூ.270 கோடி அளவில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே பிரபாஸிற்குபெரிய பட்ஜெட் ஹீரோஎன்ற பெயர் வந்தது. சலார் ஓடிடி வெளியீடு:

 

ஓடிடி தளங்களின் வருகையால், திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்

அனைத்தும், ஒரு சில நாட்களிலேயே ஓடிடி தளங்களிலும் வெளியாகி விடுகின்றன. அந்த வகையில், சலார் படத்தையும் இந்தியாவின் பிரபல

ஸ்ட்ரீமிங் தளங்களுள் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் தளம், ரூ140 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இந்த படத்தை, நாளை முதல் (சனிக்கிழமை, ஜனவரி 20)

  நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். சலார் திரைப்படம் தமிழ், தெலுங்கு,

  மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இன்று இரவே இப்படம் நெட்ஃப்ளிக்ஸில் காண கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 


சலார் மொத்த வசூல்:

 

சலார் திரைப்படம் வெளியாகி பல வாரங்கள் கடந்து விட்டது.

  படம் வெளியான போது தமிழகத்தை தவிர பிற மொழிகளில் இருந்து மிகவும் பாசிடிவான விமர்சனங்களே இப்படத்திற்கு கிடைத்தது. ஆந்திரா,

  தெலங்கானா ஆகிய பகுதிகளில் இப்படம் ஹிட் அடித்துள்ளது. வட இந்தியாவிலும் இப்படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனங்களும்

நல்ல வசூலும் கிடைத்தது. இப்படம் உலகளவில் ரூ.611 கோடி கலெக்ட் செய்ததாக திரை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

 2023ஆம் ஆண்டு வெளியாகி அதிக வசூல் படைத்த இந்திய படங்களின் லிஸ்டில் சலார் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தை பொருத்த வரை,

  சலார் படம் ரூ.10 கோடிக்கும் குறைவாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், இப்படம் தமிழகத்தில் தோல்வியை தழுவியதாக ரசிகர்கள் கருதினர்.

 

About UPDATE