இந்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உலகின் மிக முக்கியமான நீர்வழிகளில் ஒன்றான செங்கடலில் சர்வதேசத்திற்கு எதிரான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
நடத்திவருகின்றனர். இதனால், கப்பல் பணியாளர்களுக்கும், கடற்படையினர்
மற்றும் எங்களின் நட்பு நாடுகளுக்கும், வணிகத்துக்கும் ஆபத்து ஏற்பட்டு
வருகிறது. இதுவரை சர்வதேச வர்த்தக கப்பல்கள் மீது கிளர்ச்சியாளர்கள் 27 முறை தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அதனால், 50ற்கும் மேற்பட்ட நாடுகள்
பாதிக்கப்பட்டுள்ளன.
20ற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் மேற்குறிப்பிட்ட கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கையால் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றனர். பிணைக் கைதிகளாகவும்
பிடிக்கப்பட்டிருக்கின்றனர்.
கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதல் நடவடிக்கையால் வணிகக் கப்பல்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஆபத்துகளை கட்டுப்படுத்தும் விதத்தில்,
ஏமான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வரலாற்றில் முதல் முறையாகக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன." என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.