லிந்துலையில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் உயிரிழப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

லிந்துலையில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் உயிரிழப்பு

 

லிந்துலை - பாமஸ்டன் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 


பாமஸ்டன்   தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான  58 வயதான ஒருவரே  உயிரிழந்துள்ளார்.

 

இவர்  தனது தோட்டத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது,  நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின் கம்பி மூலம் மின்சாரம் தாக்கி மயக்கமுற்றுள்ளார்.

 

அயலவர்கள் அவரை மீட்டு  லிந்துலை  வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார். 

 

இறந்தவரின் சடலம் விந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About UPDATE