தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
இறுதியாக, அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’, 'கிறிஸ்டோபர்’
படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
அவ்வபோது பயணங்கள் மேற்கொள்ளும் அமலா பால், கடந்த அக்.26 இல் தனது பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டனர்.
கேரள மாநிலம் கொச்சியிலுள்ள விடுதியில் எளிமையான முறையில் அமலா பால் - ஜகத் தேசாய் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார்.