புதுக்குடியிருப்பில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

புதுக்குடியிருப்பில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் இரண்டு வாள்கள், கஞ்சா மற்றும் ஐஸ் போதை பொருட்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ்மா அதிபரின் யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M B R கேரத் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசுவமடு பகுதியில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M B R கேரத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான பதும் ரத்னாயக்க, ஜெயசூரிய, பிரதீபன்,;ஆகிய பொலிஸ் குழுவினரால் விசேட சோதனை நடவடிக்கையினை மேற்கொண்ட போது 4 பைக்கற்றுக்களில் 20 கிராம் கஞ்சா போதைப் பொருளுடனும் 600 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடனும் இரண்டு வாழ்களுடனும் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளின் பின் குறித்த சந்தேக நபரை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


About ஈழ தீபம்