நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய திஷ்னவின் மரணம்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய திஷ்னவின் மரணம்!

 

களனி ஆற்றில் நீராடச் சென்ற போது முதலை ஒன்றால் இழுத்துச்

செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவனின் சடலம் உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 


அதன்படி நேற்று (18) இரவு சிறுவன் திஷ்னவின்  சடலம் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

 

கடுவெல வெலிவிட்ட புனித அந்தோனி மாவத்தையில் களனி ஆற்றுப்படுகையில் இந்த துரதிஷ்டவசமான சம்பவம் கடந்த தினம் பதிவாகியிருந்தது.

 

சிறுவனின் பாட்டி துணி துவைத்துக் கொண்டிருந்த போது, ​​சிறுவன் திஷ்ன தனது தம்பியுடன் அருகில் நீராடிக் கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக அங்கு வந்த முதலை ஒன்று திஷ்னவை இழுத்துக் சென்றது.

 

பின்னர் அந்த இடத்திற்கு வந்த பொலிஸ் கடற்படை பிரிவினர் மற்றும் கடற்படை சுழியோடி அதிகாரிகள் காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்ததுடன் பிரதேசவாசிகளும் அதற்கு ஆதரவளித்தனர்.

 

அதன்படி சிறுவன் திஷ்னவின் சடலம், சிறுவன் நீராடிய இடத்தில் இருந்து  சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் ஆற்றின் கீழ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

 

About UPDATE