சிறுநீரகப் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம்.
உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் வகையில் சிறுநீரகம் செயல்படுகிறது.
இது உடலில் இரத்தத்தை வடிகட்டில், கழிவுப்பொருள்களை அகற்ற உதவுகிறது.
சில சமயங்களில் செல்களில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீரக பிரச்சனை ஏற்படலாம். சிறுநீரக மாற்றங்களை புறக்கணிப்பது, மிகக் கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
அந்த வகையில் சிறுநீரக புற்றுநோய் பிரச்சனையை இன்று பலரும் அனுபவிக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும்.
சிறுநீரக புற்றுநோய் வருவதற்கு முன், உடலில் சிறுநீரில் இரத்தம், சிறுநீரகத்தில் லேசான வலி, சிறுநீர் கழிக்கும் போது வலி போன்ற
பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம். இதற்கு முக்கிய காரணமாக அமைவது உடல் எடை அதிகரிப்பு, சிகரெட் பிடிப்பது போன்றவை அடங்கும்.
சிறுநீரக புற்றுநோய்க்கு அவ்வாறு சிகிச்சை அளிக்கலாம் என்பது குறித்து வயது வந்தோருக்கான சிறுநீரக மாற்று
அறுவை சிகிச்சை, சிறுநீரக மருத்துவர் மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் பாரத் கர்மாகர் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சிறுநீரக
புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள்
பொதுவாக சிறுநீரக புற்றுநோய் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. புற்றுநோய் செல்கள் சிறுநீரகங்கள் மட்டும் இருப்பின், அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.
ஆனால், புற்றுநோய் செல்கள் சிறுநீரகத்திற்கு வெளியில் பரவியிருந்தால், அதற்கு பிற முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
சிறுநீரக புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் முன், மருத்துவர் குழு நோயாளியின் உடல்நிலை, புற்றுநோயின் வகை மற்றும் அதன் பரவலின் வேகம் போன்றவற்றின் அடிப்படையில் சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கிறது.
சிறுநீரக புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை
சிறுநீரக புற்றுநோய் உள்பட பல்வேறு சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சையளிப்பதே நெஃப்ரெக்டோமி என அழைக்கப்படுகிறது.
இதில் சிறுநீரக
அறுவை சிகிச்சை முறைகள் சிலவற்றைக் காண்போம்.
பாதிக்கப்பட்ட
சிறுநீரகத்தை அகற்றுதல்
முழுமையான நெஃப்ரெக்டோமி என்பது முழு சிறுநீரகத்தையும், அதனைச் சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களையும், சில நேரங்களில் நிணநீர்
மற்றும் அட்ரீனல் சுரப்பிகள் போன்ற கூடுதல் திசுக்களையும் அகற்றுவதை உள்ளடக்கியதாகும். இந்த அறுவை சிகிச்சையில் அடிவயிற்றின் கீழ் பகுதியில்
வெட்டப்படுகிறது. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையின் மூலம் சிறிய கீறல்கள் மூலம் இதை செய்யலாம்.
சிறுநீரகத்திலிருந்து
கட்டியை நீக்குதல் (பகுதி நெஃப்ரெக்டோமி)
இந்த வகை முறையானது சிறுநீரக ஸ்பேரிங் அல்லது நெஃப்ரான்-ஸ்பேரிங் அறுவை சிகிச்சை என அழைக்கப்படுகிறது.
இந்த முறையில் முழு சிறுநீரகத்திற்கும் பதிலாக, புற்றுநோயின் ஒரு சிறிய பகுதியையும், அதனைச் சுற்றியுள்ள திசுக்களையும் அகற்றப்படுகிறது.
இது ஒரு திறந்த செயல்முறையாகும். இவை லேப்ரோஸ்கோபியாக அல்லது ரோபோவின் உதவியுடன் செய்யப்படுகிறது.
சிறுநீரக
அறுவை சிகிச்சை
சிறுநீரக புற்றுநோய்க்கான பொதுவான சிகிச்சை முறையாக சிறுநீரக அறுவை சிகிச்சை உள்ளது. ஒரே ஒரு சிறுநீரகத்தைக்
கொண்டிருப்பவர்களுக்கு, இந்த விருப்பத்தை மருத்துவர்கள் தேர்வு செய்யலாம். மேலும், இந்த முறையானது சிறுநீரக செயல்பாட்டைப்
பாதுகாப்பாக வைப்பதுடன், மற்ற அபாயங்களைக் குறைக்கவும் உதவுகிறது.
புற்றுநோய்க்கான
பிற சிகிச்சை முறைகள்
குறைவான
மற்றும் தீவிரமான புற்றுநோய்களுக்கு சில சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இதில் காண்போம்.
இம்யூனோதெரபி
நோயெதிர்ப்புச் சிகிச்சை அல்லது இம்யூனோதெரபி சிகிச்சையின் மூலம், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதற்கு நபரின்
நோயெதிர்ப்பு அமைப்பு பலப்படுத்த உதவுகிறது..
இந்த சிகிச்சை முறையில் புற்றுநோய் செல்களை அழிக்க புரோட்டான்கள்
மற்றும் எக்ஸ்-கதிர்கள் போன்ற மூலங்களில் இருந்து அதிக ஆற்றல் கொண்ட உயர் ஆற்றல் கற்றைகள் பயன்படுத்தப்படுகிறது.
இலக்கு
சிகிச்சை
இந்த
சிகிச்சையில் மருந்துகள் மூலம் சிறுநீரக புற்றுநோய் செல்களைக் குறைக்க மருத்துவர்கள் முயற்சிப்பர்.
சிறுநீரக புற்றுநோயை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையைப் பெறலாம்.
இந்த சிகிச்சை முறைகள் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. முன்பாகவே கண்டறிவது மருத்துவர்கள் எளிதான முறையின் மூலம் சிகிச்சையை மேற்கொள்ள முடியும்.
எனவே, சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அலட்சியப்படுத்தாமல் கவனமாக இருப்பது அவசியமாகும்.