ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை கடற்படை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை கடற்படை

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இலங்கை கடற்படையின் கப்பலை செங்கடல் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ;ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,“உக்ரைனிலும் போர், காசாவில் மேலும் ஒரு போர், இதனால் பொருட்களின் விலை அதிகரிக்கலாம். தற்போது செங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகளை அனுப்புவதால் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல்கள் செங்கடல் கடலில் பயணிக்காமல் தென்னாபிரிக்காவை சுற்றிச் சென்றால் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நாமும் இணைந்துள்ளோம். கப்பல்களை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்றும் செங்கடலுக்கு பகுதிக்கஅனுப்பப்படவுள்ளது. இதன்போது இரண்டு வாரங்களுக்கு அங்கு கப்பலை அனுப்பினால் 250 மில்லியன் ரூபாய் செலவாகும். நாங்கள் கடினமான இடத்தில் இருக்கிறோம். எனினும் அதைப் பாதுகாக்க வேண்டும்."என்றார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     

About UPDATE