ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஒலிவர் (Christian Oliver) விமான விபத்தில் பலியானார்.
கரீபியன் தீவு அருகே ஏற்பட்ட குறித்த விபத்தில் அவரது இரண்டு மகள்களும் விமானியும் பலியாகியுள்ளனர்.
இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் சிறிய ரக விமானத்தில் பெக்கியா என்ற சிறிய தீவில் இருந்து செயின்ட் லூசியா புறப்பட்டபோது,
சிறிது நேரத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது.
தகவல் அறிந்து செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் கடலோர காவல்படையினர், நீர்மூழ்கி வீரர்கள்,
மீனவர்கள் தங்களது படகுகளில் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், 4 பேரையும் சடலமாகவே மீட்க முடிந்துள்ளது.
ஜெர்மனியில் பிறந்த Christian Oliver, The Good German என்ற படம் மூலம் அறிமுகம் ஆனார். 2008 இல் Action Comedy படமான Speed Racer படத்தில் நடத்திருந்தார்.
ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சித் தொடரில் நடித்து பிரபலமானார். அதன்பின் ஒலிவர் 60-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.