மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் பொலிஸார் திடீர் சோதனை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் பொலிஸார் திடீர் சோதனை

 

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி,குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில்  

நேற்று (09) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


 

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால  ஹேரத் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் 

பிரபாத் விதானகே தலைமையில் மடு பொலிஸ் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் சோதனைச் சாவடியில் குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

 மடு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசன்ன சில்வா தலைமையில் மடு பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து குறித்த போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

 

இதன் போது மன்னாரில் இருந்து சென்ற வாகனங்கள், மற்றும் பரய நாளன் குளம்  வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த சகல வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

 

வாகனங்களில் பயணித்த மக்களுக்கு போதைப் பொருள் பரிசோதனை குறித்து அறிவித்தல்கள் வழங்கப் பட்டதன் பின்னர் 

சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.

 

மேலும் மோப்ப நாயின் உதவியுடன் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

எனினும் திடீர் நடவடிக்கைகளினால் குறித்த வீதியூடாக பயணித்த மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

About UPDATE