ஏமனில் ஹவுதி
கிளர்ச்சியாளர்களின் இலக்குகளுக்கு எதிராக அமெரிக்க மற்றும் பிரித்தானிய வான்வழித்
தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏமன் தலைநகர்
சானா உட்பட பல நகரங்களின் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள்
நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக விமானங்கள், கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர்
19ஆம் திகதி முதல் செங்கடலில் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 27
தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலைமையை
கட்டுப்படுத்த இந்த கூட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது