சிலரின் காதல் உறவு தவறானதாக இருக்கும் பொழுது அதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று தெரியாமல் இருப்பார்கள்
.காதல் என்பது ஒரு உணர்வில் ஆரம்பித்து உறவில் முடியும். ஆனால் அது எல்லோருக்கும் உறவில் முடியாது
தவறான காதலில் இருந்தால் அக் காதல் பாதியில் முறிந்து விடுவதுடன் பெரிய மன வேதனையையும் கொடுக்கும்.
ஆகவே நீங்கள் தவறான
காதளுக்கான அறிகுறிகளை இங்கு பார்ப்போம்.
அதாவது, காதல் உறவில் ஏற்படும் சிறு சிறு மோதல்களே, பிற்காலத்தில் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுத்து விடும்.
தவறான காதல் உறவில் இருபவர்களுக்கு அவர்களின் கருத்துக்களுக்குள் மோதல் இருக்கும். இது, சிறிய பிரச்சனைகளுக்கும் கூட பெரிய விவாதமாக மாற வழிவகுத்து விடும்.
இந்த உறவு, நீங்கள் நினைக்கும் அளவிற்கு நல்ல உறவாக இருக்காது.மேலும், நல்ல
உறவில், நீங்கள் சண்டையிட்டாலும் விவாதம் மேற்கொண்டாலும் அதில் உங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு இடம் இருக்கும். நீங்கள் உறவில் இருப்பவர்களுடன் எப்போதும்
தேவையற்ற விவாதம் செய்து கொண்டிருந்தால்
அது நல்ல உறவே கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
அதனைத்தொடர்ந்து, தவறான உறவில் இருப்பவர்களுக்கு அவர்களின் உணர்ச்சிகள் எப்போதும் காயப்பட்டது
போன்ற உணர்வு இருக்கும். அதனால், தான் என்ன நினைக்கிறோமோ அதை பெரும்பாலான சமயங்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் கூற தயங்குவார்கள். எதையும் எடுத்துறைக்கவே
அவர்களுக்கு ஆற்றல் இல்லாதது போல தோன்றும். உங்களுக்கு நடந்த மகிழ்ச்சியான விஷயங்களை கூட அவரிடம் கூற
நீங்கள் தயங்குவீர்கள். ஒரு உறவில் இருக்கிறீர்கள் என்றால், அது நீங்கள்
நீங்களகாக இருக்க உதவி செய்ய வேண்டும். ஆனால், உங்களை பற்றிய விஷயங்களை நீங்கள் பயந்து மறைக்கிறீர்கள்
என்றால், அது சரியான உறவா என்பதை யோசித்துக்கொள்ள
வேண்டும்.
ஏற்றார் போல தனது காதலர்/காதலியை மாற்ற வேண்டும் என்று நினைப்பர்.
இது, நீங்கள் சரியானவர் இல்லை என்ற உங்களின் உள்ளுணர்வின் வெளிபாடாகும்.
உறவுகள் கண்டிப்பாக உங்களை நல்ல மனிதராக மாற்ற உதவும். ஆனால், உங்களுக்கு துணையாக இருக்கும் நபரை திருத்த வேண்டும்
என்ற எண்ணம் இருந்தால், அப்போது நீங்கள் உங்கள் உறவு குறித்து ஆழ்ந்து யோசிக்க வேண்டும் அதனைத்தொடர்ந்து,
பல சமயங்களில், நீங்கள் தவறான உறவுகளில் இருந்தால் அது உங்களுக்கு உள்ளூர பல உணர்வுகளை கொடுக்கும். நாம் இப்படி ஏற்படும் உணர்வுகளை
பல சமயங்களில் மறுத்துவிட்டு, நம்மிடம் நாமே பொய் கூறிக்கொள்வோம். இந்த உணர்வுகள், நமது உடல் வாயிலாகவும் வெளிவரும்.
காரணமே இன்றி செரிமான பிரச்சனை ஏற்படுவது, ஞாபக மறதி ஏற்படுதல், திடீர் உடல் எடை
குறைவது, உடல் எடை ஏறுவது என பல மாற்றங்கள் ஏற்படும். இது போன்ற மாற்றங்கள், தவறான உறவுகளாலும் ஏற்படும்.