நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த கொள்ளையன் சிக்கினான் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த கொள்ளையன் சிக்கினான்

 

இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து நுழைந்து சொத்துக்களை கொள்ளையிட்ட குற்றத்திற்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை மேல்

மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

 


நேற்று (16) காலை, சீதுவ பொலிஸ் பிரிவில் வைத்து எம்பிலிப்பிட்டிய, புதிய நகரைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றை உடைத்து 20 இலட்சம் ரூபா

பெறுமதியான தங்கம், தெஹிவளை பொலிஸ் பிரிவில் அல்விஸ் பிளேஸ் மற்றும் இன்வெண்டர் பகுதியில் உள்ள 2 வீடுகளை உடைத்து 12,000 ரூபா

பணம் மற்றும் 6 அரை பவுண் தங்க நகைகள் கொள்ளையிட்டமை, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் 4,000 ரூபா பணம் மற்றும்

இரண்டு .டி.எம் அட்டைகளை எடுத்து 6,46,000 ரூபாவை பயன்படுத்தியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

 

இந்த சந்தேக நபருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பில் 5

  பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

 

சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், உருக்கப்பட்டிருந்த 65 கிராம் 418 மில்லிகிராம் எடையுள்ள பல தங்கத் துண்டுகள்

8 பவுன் 440 மில்லிகிராம் எடையுள்ள 2 தங்க மோதிரங்கள், ரத்தினக் கல் மற்றும்

24 வைரங்கள் ஆகியவற்றை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

About UPDATE