சிம்பாப்வே அணிக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சிம்பாப்வே அணிக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள்போட்டி தற்சமயம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.


போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Charith Asalanka 101 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Kusal Mendis 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் Richard Ngarava, Blessing Muzarabani, Faraz Akram, ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.இதன்படி சிம்பாப்வே அணிக்கு 274 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

About ஈழ தீபம்