இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவரை தேடும் பொலிஸார் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இளம்பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவரை தேடும் பொலிஸார்

 

இளம்பெண் ஒருவரை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆனமடுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

 

19 வயதுடைய இளம்பெண் ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

 


மேலும், அந்த நபர் தன்னை மிகவும் நேசிப்பதாகவும், தான் பேச விரும்புவதாகவும், தன்னை ஆளில்லா பகுதிக்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் அந்

சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட கடும் அதிர்ச்சியால் அவர் எதோ ஒரு வகையான மாத்திரையை உட்கொண்டு தற்போது புத்தளம் ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

நவகத்தேகம பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரியும் இளம் பெண் தனது பாட்டியுடன் அந்த பகுதியில் உள்ள அறை ஒன்றில் வாடகை அடிப்படையில் தங்கியிருந்துள்ளார்.

 

ஆனமடுவ நகருக்கு தனது தேவைகளுக்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக வந்த போது சந்தேக நபரை சந்தித்ததாகவும் அந்த நபரை தனக்கு நன்கு தெரியும் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பெண் பொலிஸாரிடம்  கூறியுள்ளார்.

 

சம்பவத்தன்று பெண்ணின் தந்தை தங்குமிடத்திற்கு வந்திருந்த நிலையில் சம்பவம் குறித்து தந்தைக்கு தெரிவித்துள்ளார்.

 

எனினும் இதுவரை சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை.

 

About UPDATE