யாழ். வடமராட்சி பிரதேசத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் உயர் தர பரீட்சையில் தோற்றியுள்ளார்.
பருத்தித்துறை
ஆதார வைத்தியசாலை தரப்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதாக
நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த
மாணவிக்கு அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைவடையாதிருந்தமை
உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அந்த மாணவியை மருத்துவ தாதி ஒருவருடன் அவசர நோயாளர்
காவு வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச்சென்று பரீட்சையில் தோற்றுவதற்கு
ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன