பாராளுமன்றில் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு
இந்த ஆண்டுக்கான முதல்
பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது.
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர்.
VAT வரியை 18 சதவீதத்தால் அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு
தெரிவித்தே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு
உடை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.