ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களை கலைக்க
பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்..
இன்று (18) பிற்பகல் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஏற்பாடு
செய்யப்பட்டிருந்ததுடன், போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புடன் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
கோரி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துடன் இணைந்ததாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பள முரண்பாடுகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட நேரிடும் என பல்கலைக்கழகங்களுக்கு
இடையிலான தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.