சார்ஜ் போட்டபடியே பேசியதால் வெடித்து சிதறிய செல்போன்.. பெண் ஒருவர் உயிரிழந்தார். - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சார்ஜ் போட்டபடியே பேசியதால் வெடித்து சிதறிய செல்போன்.. பெண் ஒருவர் உயிரிழந்தார்.

 

தஞ்சை: தஞ்சை அருகே சார்ஜ் போட்டபடியே பேசியபோது செல்போன் வெடித்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள ஆடுதுறை விசித்திரராஜ புரத்தை சேர்ந்தவர் கோகிலா.. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரது கணவர் உயிரிழந்தார்.

தனது மகனுடன் வசித்து வந்த கோகிலா, கபிஸ்தலம் என்ற ஊர் அருகே செல்போன் கடை மற்றும் வாட்ச் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார்.

வழக்கம் போல இன்று காலை தனது கடைக்கு சென்ற கோகிலா தனது பணியை செய்த் வந்துள்ளார். மதியம் செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார்.

 

அப்போது செல்போனுக்கு அழப்பு வரவே சார்ஜ் போட்டபடியே தனது செல்போனை எடுத்து பேசியதாக சொல்லப்படுகிறது.

போனில் பேசிக்கொண்டு இருந்த போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில், கடை முழுவதும் தீ பற்றியது.

 உடனடியாக இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீ யை அணைத்தனர்.

அப்போதுதான் கோகிலா செல்போன் வெடித்துதில் தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

 

உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு அங்கிருந்தவர்கள் போன் செய்துள்ளனர். விரைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோகிலாவை பரிசோதனை செய்து அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

 கோகிலா உயிரிழந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 உயிரிழந்த கோகிலாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

செல்போன் சார்ஜ் போட்ட போது வெடித்ததால் உயிரிழந்தாரா அல்லது மின் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தாரா.

.. மின் கசிவுக்கு வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செல்போனில் சார்ஜ் போட்ட படி பேசியதால் போன் வெடித்து செல்போன் கடை வைத்து இருந்தவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

செல்போன்களை பொறுத்தவரை எக்காரணம் கொண்டும் சார்ஜ் போட்டுக்கொண்டே பயன்படுத்தக்கூடாது என செல்போன் நிறுவனங்களும் டெக்னிக்கல் நிபுணர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும் பலரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சார்ஜ் போட்டபடியே வீடியோ பார்ப்பது...

கேம் விளையாடுவது..செல்போனில் பேசுவது என அஜாக்கிரதையாக இருப்பதை காண முடிகிறது.

 இதனால், செல்போன் பேட்டரி சூடாகி வெடித்து விபரீதம் ஏற்படும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் முற்றிலும் செல்போனை சார்ஜ் போட்டுக்கொண்டு பயன்படுத்தவே கூடாது என்று அத்துறையை சேர்ந்த நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

About UPDATE