உள்ளூராட்சி மன்ற தேர்தலை கூட நடத்த முடியாத நிலை! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

உள்ளூராட்சி மன்ற தேர்தலை கூட நடத்த முடியாத நிலை!

 

ஜனாதிபதியால்,ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியை பரப்பி

மக்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து எடை போட்டு வருகிறார்.


 

சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் .தே. வேட்பாளர் யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டும் தற்போது குழப்பத்தில் உள்ளனர். உள்ளுராட்சி

மன்றத் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து

வருகிறது.ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களும் தயாராகவே உள்ளனர் என்று

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 68 ஆவது கட்டமாக,அனுராதபுரம் ஸ்ரீ துடுகெமுணு மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம்

ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (17) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்

மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இப்பாடசாலையில் நடனம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம் மற்றும் அரங்கேற்றங்களுக்குத் தேவையான ஆடைகளைக் கொள்வனவு

செய்வதற்குத் தேவையான நிதியுதவியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

 

மோசடியில் ஈடுபட்ட இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு வரப்பிரசாதம்!

 

மோசடி கும்பலொன்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட ஏராளமான மருந்துகளில்

மோசடி செய்துள்ளனர்.மனித இம்யூனோகுளோபுலின் என்ற மருந்துடன் நீர் கலக்கப்பட்டுள்ளது.ஆளும் தரப்பு  அமைச்சர்கள் ஜனாதிபதியின்

பாதுகாப்பில் திருடும்போது கூட ஜனாதிபதி இந்த அமைச்சர்களை வெளியேற்றாது அவர்களை பாதுகாத்துக் கொண்டே வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

மருந்துப்பொருள் மோசடி செய்த சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த போது

ஜனாதிபதி,மொட்டுக் கட்சியின் 113 பேரை பயன்படுத்தி சுகாதார அமைச்சரைப் பாதுகாத்தாலும்,சமீபத்தில், வியட்நாமில் கூடிய விலையில்

கோவிட் பரிசோதனை உபகரண தொகுதிகளை கொள்வனவு செய்யும் விடயத்தில் நிதி முறைகேடு காரணமாக,22 இலட்சம் அமெரிக்க டொலர்

திருடிய குற்றத்துக்காக வியட்நாம் சுகாதார அமைச்சருக்கு 18 வருடங்களும்,அமைச்சருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு

29 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.வியட்நாமில் இவ்வாறு நடக்கும் போது, இந்நாட்டில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட சுகாதார

அமைச்சரை பாதுகாக்க ஜனாதிபதி முதல் ராஜபக்ச,மொட்டுக் குழுவின் கையாட்கள் சகலரும் கை தூக்கி உதவினார்கள் என எதிர்க்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

வியட்நாம் இலங்கையைப் போல் வங்குரோத்தல்லாத வேகமாக அபிவிருத்தி கண்டு வரும் நாடு.இந்த அபிவிருத்தியடைந்து  வரும் நாட்டிலும் திருட்டுக்கு

தண்டனை வழங்கப்படும் போது,வங்குரோத்தான நாட்டில்,மக்கள் மீது பெரும் வரிச்சுமை சுமத்தப்பட்டு,திருட்டு,கடத்தல் பெரிய அளவில் நடத்தப்பட்டு

வருகிறது.இந்நாட்டை அழித்த வங்குரோத்தடையச் செய்த திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய வளங்களை இந்நாட்டின்

கல்வி,சுகாதாரம்,விவசாயம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

 

பாடசாலைகளில் குடிநீர் துண்டிக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பஞ்சமில்லை.

 

நாட்டில் 18% VAT வரியை அதிகரித்து ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்கள் செல்வது போலவே 250 மில்லியன் ரூபா செலவழித்து செங்கடலைப் பாதுகாக்க

கடற்படையை அனுப்பினாலும், பாடசாலைகளால் குடிநீர் கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதாகவும்,வியட்நாமில்

தண்டிக்கப்பட்டதைப் போல,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வெளிப்படத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற நீதித்துறை கட்டமைப்பு மூலம்

திருடர்கள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

 

கமிஷன் இல்லாமல் நேர்மையாகவும் தூய்மையாகவும் மக்களுக்கு சேவை செய்யும் திறன் தனக்கு இருப்பதாகவும்,இதற்காக தம்மை சுற்றி பெரும்

நன்கொடையாளர்கள் இருக்கின்றனர் என்றும்,இங்கு பணம் எதுவும் தனக்கு கிடைக்கப்பெறுவதில்லை என்றும், உரிய உபகரணங்களை மாத்திரமே தாம்

பெற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

எனவே,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையும் மக்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு 

முன்வைக்கப்படும்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளை முன்வைக்காமல் தொடர்புடைய தகவல்களை 

அணுக ஒரு நேரடித் திட்டம் வகுக்கப்படும். ஒவ்வொரு கொள்முதல் திட்டத்திற்கும் பல்தரப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வேலைத்திட்டம்

தயாரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 

About UPDATE