முச்சக்கரவண்டியுனுள் பெண்ணை உயிருடன் எரிக்க முயற்சி! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

முச்சக்கரவண்டியுனுள் பெண்ணை உயிருடன் எரிக்க முயற்சி!

 

கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு  பொலிஸ் நிலையத்திற்கு தேவைப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


 

கடந்த 10ஆம் திகதி பெண்ணொருவர் மீது பெற்றோல் ஊற்றி தீவைத்து கொலை செய்ய முயற்சித்த சந்தேகநபரை கைது செய்வதற்கே பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

 

குறித்த சந்தேக நபர் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெரு, இலக்கம் 93/13 இல் வசிக்கும் மொஹமட் நிஜாம் மொஹமடி சப்னிஸ் ஆவார்.

 

சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

 

0717 478 912

0718 594 423

0112 323 356

 

About ஈழ தீபம்