நீங்கள் காதலிப்பவரை உங்கள் வலையில் சிக்க வைப்பது எப்படி? - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நீங்கள் காதலிப்பவரை உங்கள் வலையில் சிக்க வைப்பது எப்படி?

 

உங்கள் மனதிற்கு மிகவும்  பிடித்த நபரை உங்களுக்கு அடிமையாக்கி, உங்களுக்கானவராக அவர் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா??

  அதற்காக நீங்கள் செய்ய வேண்டிய சில வேலைகள் இருக்கின்றன. இவற்றை ஆரோக்கியமான வழியில் செய்தால்,  கண்டிப்பாக நீற்கள் நினைத்ததை நிகழ்த்தலாம்.. உங்கள் துணையுடன் ஆரோக்கியமான மற்றும் நீடித்த தொடர்பை உருவாக்க, இந்த டிப்ஸ்கள்  உங்களுக்கு உதவும்.




 

1.உணர்ச்சிப்பூர்வமாக நெருக்கமாகுங்கள்:

ஒருவரை பிடிப்பதற்கும் பிடிக்க வைப்பதற்கும் அழகு முக்கியமல்ல

அவருடன் உணர்ச்சி பூர்வமாக நெருக்கமாவதே போதும்.  ஒரு உறவில், குறிப்பாக காதல் உறவுகளில் உணர்ச்சிப்பூர்வமான ஒட்டுதல் இருந்தால் அந்த உறவு நீடித்து நிலைக்கும். இப்படி உணர்ச்சிப்பூர்வமாக நெருக்கமாக, உங்களது எண்ணங்கள், உணர்வுகள்வருங்கால கனவுகள் ஆகியவற்றை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும். இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும் இது உதவும்.  இது, உங்களை நீங்கள் இன்னொருவரின் கண்ணோட்டத்தில் இருந்து புரிந்து கொள்ளவும் உதவும்.

 

2.ஒன்றாக நேரம் செலவிடுதல்:

இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றாக நேரம் செலவிடுவது கண்டிப்பாக உங்களுக்குள் இருக்கும் பிணைப்பை இன்னும் ஆழமாக்க உதவும். இருவருக்கும் பொதுவாக பிடித்த செயல்களை ஒன்றாக செய்ய ஆரம்பியுங்கள்

அது, ஒரு ரொமாண்டிக் இரவில் நெடுந்தூர பயணம் மேற்கொள்வதாக இருக்கலாம். வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதாக இருக்கலாம். ஒன்றாக உணவு சாப்பிடுவதாக இருக்கலாம். இப்படி, சில விஷயங்களை ஒன்றிணைந்து நீங்கள் செய்ய ஆரம்பிப்பதால் உங்களுக்குள் இருக்கும் பிணைப்பு இறுக்கமாகும்.

 


3.பாராட்டுங்கள்.. அதிகளவிலான பாசத்தை காட்டுங்கள்:

 காதலில் பல விஷயங்கள் சொல்லாமல் புரிந்து விடும் என்பார்கள். ஆனால், இந்த கூற்று எல்லா நேரங்களிலும் உண்மையாகி விடாது. ஏனென்றால்,

 காதல் உறவில் இருக்கும் இருவருமே வெவ்வேறு நபர்கள். உங்களுக்கு பிடித்த நபர் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை வார்த்தைகளால் அல்லது உங்கள் நடவடிக்கைகளால் கூறினால்தான் அது அவருக்கு புரியும், தெரியும்

சிறு செயல்கள் செய்தாலும் அவரை அதற்காக பாராட்டுவது, எதிர்பாராமல் கட்டிப்பிடிப்பது, ஒரு முத்தம் கொடுப்பது என அனைத்தும் உங்கள் காதல் நடவடிக்கைகளுள் அடங்கும்

இது, உங்களது பார்ட்னரை முக்கியமான நபராக உணர வைக்கும். இது, அவருக்கு உங்கள் மீது உள்ள காதலை பல மடங்கில் அதிகரிக்கும்.. இப்படி நிலையாக இருக்கும் பாசம் உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சிபூர்வமான தொடர்பை வளர்க்கிறது.


4.காதலை உயிர்ப்புடன் வைத்திருங்கள்:

 

ஆரம்பத்தில் உங்களுக்குள் கொழுந்து விட்டு எறிந்த காதல் தீயை உயிருடன் வைத்திருக்க வேண்டும். உங்கள் காதலரை சர்ப்ரைஸ் செய்ய சில

 திட்டங்களை தீட்டுங்கள். டேட்டிங் செல்வதற்கான இடங்களை தீர்மானியுங்கள். உங்களுக்குள் நீங்கள் பகிர்ந்து கொண்ட காதல்

 தருணங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள். இந்த முயற்சிகள் உங்கள் காதல் இணைப்பை இன்னும் பெரிதாக்கிட உதவும்.

 

5.கொஞ்சம் ரகசியம் ..  அதிக சுதந்திரம்..

 

காதலில் வெளிப்படைத்தன்மை முக்கியமானது என்றாலும், 

உங்களது ஒரு சில அந்தரங்கங்களை எல்லாம் உங்கள் காதலருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது, உங்கள் காதல் உறவை  உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும். அது மட்டுமன்றி, காதலை தாண்டி உங்களுக்கென்று இருக்கும் தனித்துவமான விஷயங்களையும் நீங்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.  ஒரு தனி மனிதராக, உங்களுக்கென்று இருக்கும் சுதந்திரத்தை பராமரிக்கவும். இது காதல் சம்பந்தப்பட்ட  விஷயங்களை சுவாரஸ்யமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் பரஸ்பர மரியாதையையும் வளர செய்யும்.

 

About UPDATE