தமிழ்நாடு பொங்கல் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு, முன்பதிவில்லா ரயில்கள் முழுவிவரம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

தமிழ்நாடு பொங்கல் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு, முன்பதிவில்லா ரயில்கள் முழுவிவரம்

 

தமிழ்நாடு அரசு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11, 13, 14, 15, 16, மற்றும் 17 தேதிகளில் பின்வரும் சிறப்பு ரயில்களை இயக்குகிறது

06003 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில், தாம்பரம் - திருநெல்வேலி இடையே ஜனவரி 11, 13, 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு,


 மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். திருநெல்வேலி - தாம்பரம் இடையே ஜனவரி 12, 14, 17 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியில்

 இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

தாம்பரம் - தூத்துக்குடி

 

06001 தாம்பரம் - தூத்துக்குடி முன்பதிவில்லா சிறப்பு ரயில், தாம்பரம் - தூத்துக்குடி இடையே ஜனவரி 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு

இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

 

06002 தூத்துக்குடி - தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில், தூத்துக்குடி - தாம்பரம் இடையே ஜனவரி 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு

இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரயில்கள் அனைத்தும் இரயில்வேயின் டிக்கெட் முன்பதிவு

இணையதளம் மற்றும் பயணச்சீட்டு அலுவலகங்களில் முன்பதிவு செய்யலாம்.

 

சிறப்பு ரயில்கள் நின்று செல்லும் இடங்கள்:

 

செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்

சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி

சேரன்மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

 

About UPDATE