A/L பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

A/L பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

 

இந்த ஆண்டு நடைபெற்ற உயர்தர விவசாய விஞ்ஞான பரீட்சையை மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இதற்கமைய விவசாய விஞ்ஞானம் பகுதி 1 மற்றும் 2, பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


விவசாய விஞ்ஞான பாடத்தின் வினாத்தாள் முன்னதாக வௌிப்படுத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கடந்த 12ம் திகதி அந்த பாடத்தின் இரண்டாம் பாகத்தை இரத்து செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.

 

அதேநேரம் கடந்த 8ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையின்  முதல் பாகத்தை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, இந்த ஆண்டுக்கான விவசாய விஞ்ஞான பாட வினாத்தாளின் இரண்டாம் பகுதி பெப்ரவரி 1ஆம் திகதி வியாழக்கிழமை காலை 08.30 முதல் 11.40 மணி வரை நடைபெறவுள்ளது.

 

முதல் பகுதி பெப்ரவரி 1 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 01.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது.

About UPDATE