நெல் சேத மதிப்பீடுகளை ஆரம்பிக்குமாறு கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் தங்கொடுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பால் சார்ந்த உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதத்தின் போது மீண்டும் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் சிறுபோகத்தில் வரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதால் மரக்கறி பற்றாக்குறையை சமாளிக்க உரிய வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்