நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையான ‘யுக்திய ’ நடவடிக்கையின் ஒரு பகுதியாக நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மேலும் 943 சந்தேக நபர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது
செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 670 சந்தேக நபர்களும், தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இருந்த 273 பேரும் அடங்குவர்.
மேலதிக விசாரணைகளுக்காக 9 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களில் போதைக்கு
அடிமையான 25 பேர் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் நிலையம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள்
பட்டியலில் இருந்த 32 சந்தேக நபர்களும் விசேட பொலிஸ் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.