8 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

8 ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

 

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்து


ள்ளனர்.

 

கொழும்பு 6 பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

 

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தாயார் என்பதுடன், அவரது கணவர் நேற்று முன்தினம் தனிப்பட்ட தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

 

சம்பவத்தன்று மகன் வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு கட்டிடத்தின் 8வது மாடிக்கு சென்று அதிலிருந்து குதித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

 

உயிரிழந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

 

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

About ஈழ தீபம்