வீட்டுக்கே வந்த எமன்! 6 வயது சிறுவன் பலி! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வீட்டுக்கே வந்த எமன்! 6 வயது சிறுவன் பலி!

 

தினியாவல நெலுவ பெலவத்த வீதியில்  09 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

 


பெலவத்தையில் இருந்து நெலுவ நோக்கி பயணித்த லொறி ஒன்றின் வேகத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் அருகில் இருந்த வேலைத்தளம் ஒன்றுடன் இணைந்ததாக  இருந்த வீடொன்றின் மீது மோதுண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதன்போது, குறித்த வீட்டின் வாசலில் கதிரையொன்றில் அமர்ந்திருந்த குழந்தை மீது லொறி மோதியுள்ளது.

 

குறித்த விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளது.

 

லொறியின் சாரதி மற்றும் உதவியாளரும் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

முதலாம் தரத்தில் கல்வி கற்கும் 06 வயதுடைய அதித்ய புன்சரா என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தினியாவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About UPDATE