ஊவா மாகாணம் மற்றும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில்
இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் இன்று(11) முதல் மழை குறைவடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்கள் எதிர்வுகூறியுள்ளது
கிழக்கு மாகாணத்தில் தொடரும் மழையினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சித்தாண்டியிலுள்ள 2 கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு - போரதீவுப்பற்று,
வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வேத்துச்சேனை கிராமம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
சேனாநாயக்க சமுத்திரத்தின் 05 வான்கவுகள் திறக்கப்பட்டுள்ளன.
திருகோணமலையின் பல பகுதிகளிலும் தொடர் மழைவீழ்ச்சி பதிவாகின்றது.
இதனிடையே நிலவும் மழையுடனான வானிலை காரணமாக யால தேசிய பூங்காவின் பலட்டுபான நுழைவாயில்
மூடப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த நுழைவாயிலினூடாக யால பூங்காவிற்குள் பிரவேசிக்க முடியாது என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.