நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை விட்டு எப்போதுமே விலகிப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய விஷயங்களைச் செய்வார்கள்.
ஆனால் அதுவே இருவருக்கும் இடையே மிகப்பெரும் இடைஞ்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தி விடும். அப்படி இல்லாமல் நீங்கள் நேசிக்கும் நபர்
உங்களை விட்டு விலகாமல் மிக அன்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கீழ்வரும் விஷயங்களை செய்துதான் ஆக வேண்டும்
.
காதல் திருமணமோ நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடக்க
வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி, ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிக்க வேண்டியது மிக முக்கியம். குறிப்பாக ஒருவர் மீது
மற்றவருக்கு வெறுப்போ அதிருப்தியோ ஏற்படாமல் புரிந்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்
கணவனாகவோ
மனைவியாகவோ இருந்தால் கூட ஒருவருக்கொருவர் மரியாதையோடு நடந்து கொள்வதும் நடத்தப்படுவதும் மிக அவசியம்.
என்னுடைய மனைவி எனக்கு போதிய மரியாதை கொடுக்கவில்லை,
என் கணவர் எனனை மதிப்பதே இல்லை என்று புலம்புவதை விட,
நீங்கள் உங்கள் துணையிடம் இருந்து எதிர்பார்க்கும் அதே மரியாதையை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
அப்படி செய்யும்போது இயல்பாகவே உங்களுடைய துணைக்கு உங்கள் மீது மரியாதை கூடும்.
அக்கறையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓவராக அக்கறை செலுத்துவார்கள் சிலர். அது அந்த தனிப்பட்ட நபரின் சுதந்திரம்,
விருப்பம் எல்லாவற்றிலும் ஒருகட்டத்தில் தலையிட வேண்டியிருக்கும்.
அது காலப்போக்கில் நீங்கள் காட்டும் அக்கறையே அவர்களுக்கு உங்கள் மீது ஒருவித எரிச்சலும் வெறுப்பையும் ஏற்படுத்திவிடும்.
அதனால் எந்தெந்த விஷயங்களில் அக்கறை செலுத்த வேண்டும், எதில் அவர்களை சுதந்திரமாக செயல்படவிட வேண்டும்
என்பதை இருவருமே ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து, அதை வரையறை செய்து கொள்வது நல்லது.
மனதார
பாராட்டுங்கள்
நீங்கள் செய்யும் விஷயங்களுக்கு மதிப்பு கொடுத்து உங்களுடைய பார்ட்னர் நடந்து கொள்ளும்போது அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுக்கத்
தயங்காதீர்கள். அதேபோல சின்னச் சின்ன விஷயங்களுக்கும் மனம்விட்டு பாராட்டுங்கள்.