4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

 

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்

4ம் எண் ராகு பகவானுக்குரிய எண்ணாகும். இந்த எண் எங்கும், எதையும் பிரம்மாண்டமாகவும், பெரிதுப்படுத்தி எண்ணக்கூடிய மாபெரும் ஆற்றல்

கொண்ட எண்ணாகும். 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகு பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

4ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

இவர்கள் சுதந்திரமாக செயல்படும் விருப்பம் உள்ளவர்கள்


இவர்கள் கடுமையான உழைப்பாளிகள். இவர்கள் எந்த நேரத்தில் என்ன செய்வார்கள், சொல்வார்கள்? என்பதை யாராலும் யூகிக்க முடியாது

எந்த காரியத்தையும் திட்டமிட்டு செயல்படுத்த கூடியவர்கள். ஆடம்பர வாழ்க்கையின் மீது அதிகம் மோகம் கொண்டவர்கள்.

 

இவர்கள் வாய்சொல்லில் வீரர்கள். சலிக்காமல் பல மணி நேரம் பேசும் திறன் கொண்டவர்கள். இவர்களை சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

  நான்காம் எண்ணில் பிறந்த பலர் பகுத்தறிவாதிகளாக இருப்பார்கள்.

  வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்படும் பலவிதமான அனுபவ பாடங்களின் மூலம் தன்னுடைய வாழ்க்கையை திருத்தி கொள்வார்கள்.

 

இவர்களிடம் இரகசியங்களை சொன்னால் அது ரகசியமாக இருக்காது

எந்த ஒரு விஷயத்தையும், வேலையையும், அடுத்தவரிடம் சொல்லி விடுவார்கள். மனதில் பட்டதை தைரியமாக, வெளிப்படையாக கூறக்கூடிய இயல்பு கொண்டவர்களாக இருப்பார்கள்

இவர்கள் நாவை அடக்கி ஆண்டால் நல்ல நிலைக்கு வருவார்கள்.


 

தங்களுக்கு தீங்கு செய்தவர்களுக்கு தகுந்த நேரம் பார்த்து சரியான பதிலடி தருவார்கள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை அலசி ஆராய்ந்த பிறகே முடிவெடுப்பார்கள்

மற்றவர்களுக்கு உதவும் மனமும், அனைவரையும் சமமாக கருதும் குணமும் கொண்டவர்கள். தன் மனதில் தோன்றும் கருத்துக்களையும்,

  எண்ணங்களையும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு அனைவரிடமும் எடுத்துரைக்க கூடியவர்கள்.

 

அதீத தன்னம்பிக்கை மற்றும் மிஞ்சிய கற்பனையால் பாதிப்பில் சிக்கிக் கொள்ளக்கூடியவர்கள். புதுமையை விரும்புவதாக எண்ணி சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடியவர்கள். உணர்ச்சிவசத்தினால் முக்கியமான

செயல்பாடுகளில் தவறான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள். எதிலும் அதிக எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள்.

 

இவர்கள் சமயோசித அறிவு உள்ளவர்கள். தன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள். பேச்சாற்றல் கொண்டவர்கள். சூழ்நிலை எதுவாயினும் அதை

தங்களுக்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்ளக்கூடியவர்கள்

About UPDATE