யூடியூப் மூலம் மாதம் ரூ.40 லட்சம் வருவாய்: இளம்பெண் பிரஜக்தா கோலியின் சொத்து மதிப்பு தெரியுமா?சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் இளம் தலைமுறையினர் தங்களை நிறைய பேர் பின்தொடர வேண்டும் என்பதை வெறும் பிரபலமடைவதற்காக மட்டுமின்றி, பணம் சம்பாதிக்கும் வழியாகவும் பார்க்கின்றனர். ஆம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற சோஷியல் மீடியா தளங்களில் பல்லாயிரக்கணக்கான ஃபாலோயர்களைக் கொண்டவர்கள்
‘சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்’ என அழைக்கப்படுகின்றனர். சோஷியல் மீடியா பிரபலங்கள் எந்த அளவிற்கு அதிகமான எண்ணிக்கையில் ஃபாலோயர்களை வைத்துள்ளார்களோ, அதே அளவிற்கு விளம்பரங்கள் மூலமாக சில பல ஆயிரங்களில் ஆரம்பித்து பல லட்சங்கள் வரை சம்பாதிக்கின்றனர். குறிப்பாக, இன்ஃப்ளூயன்ஸர்களுக்கு அதிகப் புகழையும், வருமானத்தையும் தரும் சோஷியல் மீடியாவாக யூடியூப் உள்ளது. இந்த யூடியூப் மூலமாக மாதம் ரூ.40 லட்சம் வரை வருமானம் ஈட்டி வரும் இளம பெண் பிரஜக்தா கோலியின் உற்சாகமூட்டும் கதையைப் பார்க்கலாம். யார் இந்த பிரஜக்தா கோலி? மும்பையைச் சேர்ந்த பிரஜக்தா கோலிக்கு, பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே ரேடியோ ஜாக்கியாக வர வேண்டும் என்பது மிகப் பெரிய கனவு
. அதற்காக மும்பை பல்கலைக்கழகத்தில் கீழுள்ள VG Vaze கலை, அறிவியல் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.அதன் பின்னர் மும்பையில் உள்ள ஃபீவர் 104 என்ற எஃப்எம் சேனலில் ஓராண்டு காலம் பயிற்சி பெற்ற பிரஜக்தா, தனது சொந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். ஃபீவர் 104 எஃப்எம்-மில் 'கால் சென்டர்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்துள்ளார். ஆனால் நேயர்களிடையே பெரிதாக ரெஸ்பான்ஸ் கிடைக்காததால் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால், வேலையை விட்ட பிரஜக்தா தனது சொந்த யூடியூப் சேனலைத் தொடங்கினார். ரேடியோ ஜாக்கி டூ யூடியூப் பிரபலம்: 2015-ம் ஆண்டு 'மோஸ்ட்லிசேன்' என்ற யூடியூப் சேனலைத் தொடங்கிய பிரஜக்தாவிற்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. தனது காமெடி வீடியோக்கள் மூலமாக பிரபலமான பிரஜக்தாவை தற்போது 6.85 மில்லியன் பேர் யூடியூபில் பின்தொடருகின்றனர். நாட்டிலேயே பிரபலமான யூடியூபர்களில் ஒருவராக வலம் வரும் பிரஜக்தா, தற்போது பாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து காமெடி வீடியோக்களை தயாரிப்பது, அவர்களை பேட்டி எடுப்பது என விஸ்வரூப வெற்றி அடைந்துள்ளார். 2019-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் வெளியிட்ட '30 வயதுக்குட்பட்ட 30' பட்டியலில் பிரஜக்தா இடம் பிடித்துள்ளார். யூடியூபிற்கு அடுத்தபடியாக இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வரும் பிரஜக்தாவை 7.5 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடருகின்றனர். சோஷியல் மீடியா மூலமாக கிடைத்த பிரபலம் காரணமாக சினிமா, வெப் சீரிஸ் போன்றவற்றிலும் பிரஜக்தா கலக்கி வருகிறார். ராஜ் மேத்தா இயக்கிய 'ஜக் ஜக் ஜியோ' படத்தில் வருண் தவான், அனில் கபூர், கியாரா அத்வானி மற்றும் நீது கபூர் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார். அதனையடுத்து நெட்ஃபிளிக்ஸில் பிரபலமான “மிஸ் மேட்ச்சுடு” என்ற வெப் சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாத வருமானம், சொத்து மதிப்பு எவ்வளவு? யூடியூப் மூலம் மட்டும் மாதம் 40 லட்சம் ரூபாய் வரை பிரஜக்தா கோலி வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பிரஜக்தா கோலி ஆண்டுக்கு 4 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருகிறார். இவரது நிகர மதிப்பு சுமார் 16 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
முகப்பு / top /
இந்தியச் செய்திகள்
/ யூடியூப் மூலம் மாதம் ரூ.40 லட்சம் வருவாய்: இளம்பெண் பிரஜக்தா கோலியின் சொத்து