4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில், சென்னையில் கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக மிதமாக மழை பெய்து வருகிறது


.குறிப்பாக, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு, தாம்பரம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட சென்னையில் ஏராளமான பகுதிகளில் மழை பெய்து வருகிறது.


ஏற்கனவே குளுமையான சூழல் உள்ள நிலையில், சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால் மேலும் குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது

.இதைதொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை காலை 8.30 வரையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

About ஈழ தீபம்