Sabha Election 2024: வரும் மக்களவை தேர்தலுக்காக மூன்று பணிக்குழுக்களை திமுக (DMK) இன்று அறிவித்துள்ளது.
குறிப்பாக, நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் (CM MK Stalin)
அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவையும்,
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திடும் குழுவையும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதில், ஒருங்கிணைப்பு குழு என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்சி
பணிகளை ஒருங்கிணைக்கவும், பார்வையிடவும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் நான்கு அமைச்சர்கள் உள்பட ஐந்து
பேர் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்
ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவராக திமுக பொருளாளரும்,
மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும்,
குழு உறுப்பினர்களாக திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலாளர் இ. பெரியசாமி, துணைப் பொதுச்செயலாளர்
க.பொன்முடி, துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, உயர்நிலை செயல்
திட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும்
படிக்க | திமுகவுக்கு செக் வைக்க அண்ணாமலை எடுத்த ஆயுதம்..! 3 வாரத்தில் ரிலீஸாகும் 2ஜி ஆடியோ....
முக்கியமாக, நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவுக்கு துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக செய்தி தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன்
, சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.ராஜா, வர்த்தகர் அணி துணை
செயலாளர் கோவி. செழியன், கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி., மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.
அப்துல்லா, மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.