35,000 ரூபா கொடுப்பனவை கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

35,000 ரூபா கொடுப்பனவை கோரி சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

 

இன்று(10) காலை 8.00 மணி முதல் 48 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பிப்பதற்கு மருத்துவ சேவைகள் ஒன்றிணைந்த முன்னணியினர் தீர்மானித்துள்ளனர்.

 


நீதியான பொருளாதார கொள்கைக்கு எதிரான அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

 

தமக்கும் 35,000 கொடுப்பனவை வழங்குமாறு கோரியே இந்த பணிப்பகிஷ்கரிப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

பொது சுகாதார பரிசோதகர்கள், பாடசாலை பற்சிகிச்சை நிபுணர்கள், மருந்து கலவைகள் நிபுணர்கள், ECG தொழில்நுட்ப நிபுணர்கள், EEG தொழில்நுட்ப நிபுணர்கள்

கண் மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதார ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் பல் தொழில்நுட்ப

வல்லுநர்கள் ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

 

இதனிடையே, தெரிவு செய்யப்பட்ட பல வைத்தியசாலைகளின் தாதியர்களும் இன்று(10) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹந்தவஆரச்சி தெரிவித்துள்ளார்.

 

நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் நேற்று(09) ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 08 மணியுடன் நிறைவடைகின்றது.

 

35,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரி அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெத்திருந்தனர்.

 

அரச வைத்தியசாலைகளின் இரசாயன ஆய்வுகூட ஊழியர்கள், மருந்தாளர்கள், கதிரியக்க தொழில் வல்லுநர்கள் ஆகியோர்

இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இணைந்துள்ளதாக நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

About UPDATE