இலங்கை
மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
இன்று
இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் 9 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின்
நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட சிம்பாப்வே அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி,
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 14.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
சிம்பாப்வே
அணி சார்பில் Brian Bennett அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து
வீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும், ஏஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா
இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கமைய,
இலங்கை அணிக்கு 83 என்ற இலகுவான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி,
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 10.5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை
அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் மற்றும் குசல் மெந்திஸ் 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
தனஞ்சய
டி சில்வா ஆட்டமிழக்காது 15 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதன்படி,
3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.