கரட் விலை 2,000 ரூபா வரை உயர்வு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கரட் விலை 2,000 ரூபா வரை உயர்வு

 

இது வரலாற்றில் கரட் ஒரு கிலோகிராமுக்கு பதிவான அதிகூடிய விலையென அதன் தலைவர் ரோஹண பண்டார குறிப்பிட்டார்.

 

கரட் ஒரு கிலோகிராமின் மொத்த விலை 1,700 ரூபா அளவில் காணப்படுவதாக அவர் கூறினார்.

 


அத்துடன் லீக்ஸ் ஒரு கிலோகிராம் 450 - 500 ரூபா அளவிலும் போஞ்சி ஒரு கிலோகிராம் 1,000 ரூபாவாகவும் பச்சை மிளகாய் 

ஒரு கிலோகிராம் 800 ரூபாவாகவும் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 

அதிக மழையுடனான வானிலையினால் பயிர்ச்செய்கைகள் அழிவடைந்தமையே இதற்கான காரணமென அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ரோஹண பண்டார குறிப்பிட்டார்.

 

இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த விலைகள் குறைவடையலாம் என அவர் கூறினார்.

About UPDATE