இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில்

 இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இலவசமாக வழங்கப்படும் 20 ரயில் எஞ்சின்களில் 02 எஞ்சின்கள் எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

குறித்த எஞ்சின்கள் இந்நாட்டில் இயங்குவதற்கு ஏற்றவையா என ஆராயவே இவ்வாறு கொண்டுவரப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


இதன்படி, ரயில் எஞ்சின்களை ஆய்வு செய்வதற்காக இலங்கை ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த 05 பரிசோதகர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.

 

நாட்டின் வடக்கு ரயில்வே மார்க்கத்தில் சரக்கு போக்குவரத்திற்கு இந்த எஞ்சின்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது

About ஈழ தீபம்