ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியை கொடுத்தது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். ரஜினிகாந்தை பொறுத்தவரை ஒவ்வொரு வருடமும் அவரது திரைப்படங்களுக்கு வரும் மதிப்பு என்பது அதிகரித்துகொண்டே இருக்கிறது.வேட்டையன் திரைப்படத்திற்கும் கூட மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த படம் என்கவுண்டர் கொலைகளுக்கு எதிரான ஒரு திரைப்படம் என கூறப்படுகிறது
. அதனை தொடர்ந்து அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த்.இந்த படம்தான் இவரது இறுதி படம் என்றும் இதற்கு பிறகு அவர் சினிமாவை விட்டு விலகுகிறார் என்றும் பேச்சுக்கள் இருந்தன. ஆனால் தற்சமயம் வந்த செய்திகளின்படி அடுத்ததாக ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறார் ரஜினிகாந்த் என பேச்சுக்கள் வர துவங்கியுள்ளன.இந்த படத்தின் கதையை எழுதுவதில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் நெல்சன். முதல் பாகத்திலேயே தனது மகனை கொன்றுவிட்ட ரஜினிக்கு இந்த பாகத்தில் எப்படி கதை இருக்கும் என்கிற கேள்வி இருந்தது. இந்த கதையில் ரஜினியின் பேரன் தான் முக்கிய கதாபாத்திரமாக வருகிறாராம்.தன்னுடைய பேரனை சுற்றி ஆபத்து சூழ அதை தடுக்க ரஜினிகாந்த் செய்யும் சாகசங்களே படக்கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்கான வரவேற்பானது அதிகரித்துள்ளத