நீயா? நானா? ஒரு லவ் லெட்டர் கூட வரல - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நீயா? நானா? ஒரு லவ் லெட்டர் கூட வரல





நீயா? நானா?  சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, சாதாரண மனிதர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, இரு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, ஆராயும் நிகழ்ச்சியாக நீயா நானா இருந்து வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பப்பராகும் இந்த ஷோவை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இதுவரை பலதரப்பட்ட தலைப்புகள் குறித்து பேசப்பட்டு வருகிறது. 

 அந்த வகையில், லவ் பண்ணுடா என்று கூறும் பெற்றோர்கள் மற்றும் காதல் அமையாத பிள்ளைகள் கலந்து கொண்டுள்ளனர். அதற்குரிய ப்ரோமோவும் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரங்கமே கலகல இருக்கக் கூடிய சூழ்நிலையில், பல பெண்களுக்கு அவர்கள் நினைத்தப்படி கணவர் அமையவில்லை என்றும், 

ஆண்களுக்கு அவர்கள் நினைத்தப்படி மனைவி அமையவில்லை என்றும் புலம்பிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கெல்லாம் காரணம் காதல்தான் அந்த காதலை சரியான வயதில் செய்திருந்தால் பிரச்சனையை இல்லை என்று  நீயா நானாவில் கலத்து கொண்டவர்கள் விவாதித்து இருக்கின்றனர். அதன்படி,  ப்ரோமோவில், ”என் பிள்ளைகள் காதலிச்சு இருந்தால் நல்ல இருப்பார்கள் என்று தோணுது பொண்ணு பார்க்க போகும்  கஷட்ம இருக்கிறது ''

என்று தன்னுடைய வேதனைகளை தாய்மார்கள் சொல்லி இருந்தனர். அதனைக் கேட்டு அதிர்ச்சியான கோபிநாத், ”இந்த மாதிரி எல்லாம் நான் கேட்டதே இல்ல” என்று கலகலப்பாக சிரித்தப்படியே புலம்புகிறார். "ஒரு லவ் லெட்டர் கூட வரல” இதனை அடுத்து, 23 வயது ஆகுது, 

காலெட்ஜ் முடிச்சாச்சு, வேலைக்கு போயிட்டாங்க என் பொண்ணு இதுவரைக்கு அவளுக்கு ஒரு லவ் லெட்டர் கூட வரல அசிங்கம் என்று சொல்ல பெண் பார்த்து பெண் அமைக்கிறது என்பது தற்போது மிகப்பெரிய கஷ்டமானதா இருக்கு...இதனால் தான் வெளிநாட்டு பெண்ணா இருந்தா கூட பரவாயில்லை, லவ் பண்ணு என்பது போன்று சொல்லி பெற்றோர்கள் புலம்பு கின்றனர்.

 மேலும், ஏன் நீங்க காதலிக்கவில்லை என்று பிள்ளைகளிடம் கோபிநாத் கேட்க, அதற்கு ஒரு பெண் லவ் செட் ஆக மாட்டேங்குது என்று குழந்தை தனமாக சொல்கிறார். 

காலேஜ் இரண்டு வருடம்தான் படித்தேன். ஒரு வருடம் கோவிட்...அப்பறம் வேலைக்கு போன..வொர்க் பிரம் ஹோம் அப்படியே இருக்கேன் என்று சிரித்தப்படியே ஒரு பெண் கூறினார். 

இதற்கு கோபிநாத், இந்த கொரோனாவால் என்னென்ன பிரச்சனையெல்லாம் உருவாக்கியிருக்கிறது என்று கூறினார். இதற்கு அரங்கத்தில் இருப்பவர்கள் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். இது சம்பந்தமான ப்ரோமக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது..






About UPDATE