இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்!!!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி திடீரென காலமாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.




அவருக்கு புற்றுநோய் இருந்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழில் பாரதி படத்தில் மயில் போல ஒரு என்ற பாடலை பாடி தேசிய தேசிய விருது பெற்றவர் பாடகி பவதாரிணி .
. தேன் பொன்ற குரலுக்குச் சொந்தக்காரர். இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அந்த சிகிச்சை பலனின்றி இன்று இறந்திருக்கிறார்.  


பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. சில ஆண்டுகளாகவே கல்லீரல் புற்றுநோய் இருந்திருக்கிறது. இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையும் மேற்கொண்டு  வந்துள்ளார் . கடந்த ஐந்து மாதங்களாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக உடலி நிலையில் தொய்வு ஏற்பட்டிருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார்.

About ஈழ தீபம்