நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு






நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

 , பெற்றோல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும். பெற்றோல் ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 8 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், 

                          அதன் புதிய விலை 456 ரூபாவாகும். மேலும், ஒட்டோ டீசல் 5 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 363 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 468 ரூபாவாகும். 

 இதேவேளை, மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.

About ஈழ தீபம்