இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவின் அறிவிப்பு!!!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி தொடர்பில் ஏற்பாட்டுக் குழுவின் அறிவிப்பு!!!!!

இசைஞானி இளையராஜாவின் புதல்வியும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் தனது 47 வயதில் நேற்று

காலமானார்.புற்றுநோய் காரணமாக கடந்த 5 மாத காலமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை வழங்கபட்டு வந்த நிலையில் பாடகி பவதாரிணி நேற்று  உயிரிழந்து உள்ளார்.



இன்றைய தினம் அவரது பூத உடல் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.பாடகி பவதாரணி அவர்கள் பாரதி படத்தில் மயில் போல பொண்ணு ஒண்ணு என்ற பாடல் மற்றும் தாமிரபரணி படத்தில் தாலியே தேவை இல்லை என்ற பாடலையும் பாடியுள்ளார் .மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடல் மூலம் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது வழங்க பட்டுள்ளது .இதேவேளை யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் இலங்கை வந்துள்ளார் .இதேவேளை கொழும்பில் நடைபெற விருந்த இசை நிகழ்வு மறு அறிவித்தல் வரை பிற்போடுவதற்கு தீர்மானித்துள்ளார் இசை குழுவினர் .


இசை நிகழ்வுக்காக வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டுகள் மீண்டும்  அறிவிக்கும் போது அதனை பயன் படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

About UPDATE