கொட்டவெஹர பலுகஸ் சந்தியில் வீதித் தடைகளைப் அமைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திகதி (19) பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கொட்டவெஹர, பலுகஸ் சந்தி பகுதியில் பொலிஸ் மோப்ப நாய்களை பயன்படுத்தி பஸ்களை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்
பேருந்தில் பெண் ஒருவரை சோதனை செய்ததில், அவரின் உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மின்சாரம் இல்லாத இரண்டு டெட்டனேட்டர்கள், 165 கிராம் கருப்பு வெடிமருந்து, 605 கிராம் அமோனியா மற்றும் 10 அடி நீளமான சேவை நூல் என்பன அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கல்குவாரியில் பணிபுரிந்துவிட்டு திரும்பும் போது குறித்த வெடிபொருட்களை எடுத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டின் பின்புறம் உள்ள கல் ஒன்றை உடைப்பதற்காக குறித்த வெடிமருந்தை கொண்டு வந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், அவரது வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதால், சந்தேகநபர் மேலதிக
விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் .
விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார் .