மாத்தறையில் துப்பாக்கி சூடு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மாத்தறையில் துப்பாக்கி சூடு

மாத்தறை தெலிஜ்ஜவில சந்தியில் (20) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


 மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கைப்பேசி விற்பனை நிலையம் ஒன்றினுள் இருந்த இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞன் வெலிபிட்டிய பிரதேசத்தில் சேர்ந்தவராவார்.  துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள்  இதுவரை எந்தத் தகவலும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

About ஈழ தீபம்