அனைத்து சரும பிரச்சினைகளுக்கும் தேங்காய் எண்ணெய்யில் தீர்வு... கேரள பெண்கள் சருமத்திற்கு பயன்படுத்தும் ரகசிய குறிப்பு.... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அனைத்து சரும பிரச்சினைகளுக்கும் தேங்காய் எண்ணெய்யில் தீர்வு... கேரள பெண்கள் சருமத்திற்கு பயன்படுத்தும் ரகசிய குறிப்பு....

 
 

பொதுவாகவே கேரளத்து பெண்கள் என்றால் தனி அழகு தான் . அவர்களுடைய சருமமும் அவ்வளவு அழகாக பளபளப்பாக இருக்கும். முடியும் அவ்வளவு அழகாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு அழகை அவர்கள் பெறுவதற்கு காரணம், அவர்கள் நாட்டில் இருக்கக்கூடிய இயற்கை சூழல் என்று கூட கூறலாம். சுத்தமான தேங்காய் எண்ணெயிலேயே முழுமையான அழகு அவர்களுக்கு கிடைத்து விடுகிறது. 
 

 
அந்த தேங்காய் எண்ணெயை வைத்து தான் ஒரு இலகுவான அழகு குறிப்பை இன்று நாம் பார்க்க போகின்றோம். இந்த குறிப்புக்கு நான் பயன்படுத்த போகும் பொருள் (மஞ்சிஷ்டா) செவ்வெள்ளி தேங்காய் எண்ணெய் இந்த இரண்டு பொருட்கள் தான். நாட்டு மருந்து கடைகளில் செவ்வெள்ளி கிடைக்கும்.  இது ஒரு மரத்திலிருந்து எடுக்கப்படக்கூடிய பொருள் தான். சின்ன சின்ன குச்சிகள் போல கிடைக்கும்.   
 
 

தயாரிக்கும் முறை  
 
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 50ml அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி, இந்த செவ்வெள்ளி குச்சிகளை ஒரு கைப்பிடி அளவு போட்டுக் கொள்ளுங்கள்.   எண்ணெயை 5 லிருந்து 7 நிமிடங்கள் நன்றாக காய்ச்சிக் கொள்ளுங்கள். நன்றாக கொதித்த பின்பு ஒரு  கண்ணாடி குவளையில் கொதித்த எண்ணெயையும் செவ்வெள்ளியை போட்டு நன்றாக ஆற விட வேண்டும்.
 


 அப்போதுதான் அதில் இருக்கும் சத்து அந்த எண்ணெயில் ஊறி சூப்பரான ஒரு எண்ணெய் நமக்கு கிடைக்கும். கண்ணாடி குவளையில் ஊற்றி வைத்திருக்கும் இந்த எண்ணெயை தினமும் நாம் பயன்படுத்தி வரலாம். 
 
 முகத்திற்கு அந்த எண்ணெயை தொட்டு லேசாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். கை, கால் உடல் முழுவதும் இந்த எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து கடலை மாவு, பயத்த மாவு, நலுங்கு மாவு, அல்லது இயற்கையான குளியல் பொடி ஏதாவது போட்டு குளிப்பது சிறப்பு. 
 
இயற்கையான குளியல் பொடி இல்லாதவர்கள் சோப்பை பயன்படுத்தியே தேய்த்து குளித்துக் கொள்ளலாம். உங்களுடைய சருமத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் 15 நாட்களில் நல்ல ஒரு தீர்வை கொடுக்கக்கூடிய ரெமிடி இது. 
 
 
 
முகத்தில் கருந்திட்டுகள் இருக்கிறது. இதற்கு முன்னால் வெள்ளையாக இருந்தேன் ஆனால் இப்போது என்னுடைய சருமம் கருக்கத் தொடங்கி விட்டது. சருமம் ரொம்பவும் டிரை ஆக இருக்கிறது. அல்லது மாநிறமாக இருப்பவர்கள் நல்ல கலராக வேண்டும் என்பவர்கள் எல்லாம் இந்த குறிப்பை பயன்படுத்தி பயன் பெறலாம்.
 
 உங்களுடைய சருமத்தில் இருக்கும் வறண்ட தன்மையானது முழுமையாக நீங்கி சருமத்தை புது பொலிவோடு மாற்றக்கூடிய சக்தி இதற்கு உண்டு. நிறைய ஆயுர்வேத அழகு சாதன பொருட்களை தயார் செய்யும் போது இந்த செவ்வெள்ளியை(மஞ்சட்டியை) பயன்படுத்துகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 
 
 

 ஐந்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகள் கூட இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். ஆண்கள் முதல் பெண்கள் வரை இந்த குறிப்பை தாராளமாக பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் உங்களுடைய சருமத்திற்கு உகந்தது இல்லை என்றால் ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில் இந்த இரண்டு எண்ணெயையும் சேர்த்து கலந்து அதில் செவ்வெள்ளியை (மஞ்சிஷ்டா) சேர்த்து சூடு செய்து அதை கண்ணாடி குவளையில் ஊற்றி வைத்தும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.  இலகுவாக அழகை பெற இது ஒரு சுலபமான வழியாகும்.
 
 
 

About UPDATE