இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் யார்?.. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் யார்?..

 

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 6ம் சீசன் 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை பல போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். 


ஆனாலும் வீட்டில் இருக்கும் சில போட்டியாளர்கள் சரியாக விளையாட்டில் கவனம் செலுத்தாலும் மிக்ஸ்ஸர் சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள் என நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதிலும் கதிரவன், குயின்சி, ஜனனி.. என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 

அவர்களை தான் நெட்டிசன்கள் தொடர்ந்து ட்ரோல் செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேஷன் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி குயின்சி தான் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட இருக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்று தான் என பிக் பாஸ் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

About UPDATE