இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனா..... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனா.....

 

90களில் இருந்த நாயகிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம் நடிகை மீனா. முத்து படத்தில் இவர் தில்லானா தில்லானா பாடலுக்கு ஆடிய ஆட்டத்தை பார்த்தே ரசிகர்கள் மயங்கினர். அந்த அளவிற்கு அப்பாடலில் இடுப்பை ஆட்டி செம்ம ஆட்டம் போட்டார். 

அண்மையில் கூட இப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக நல்ல டிஆர்பி ரேட்டிங்கை பெற்றது. த்ரிஷ்யம் படத்திற்கு பிறகு நடிகை மீனா இன்னும் எந்த படங்களும் நடிக்க தொடங்கவில்லை.  
இந்த வருடம் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார், இது அவருக்கு துக்க வருடமாக அமைந்தது. இந்த நேரத்தில் தான் நடிகை மீனாவின் மறுமணம் குறித்து தகவல் வந்தது. 


 இதுகுறித்து நடிகை மீனா தற்போது, எனது கணவர் இறந்த துக்கத்தில் இருந்தே நான் இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் இதுபற்றி எல்லாம் பேசுவதா. நான் இப்போது கதைகளை தேர்வு செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். மற்றபடி என்னை பற்றி பரவும் தகவல் வெறும் வதந்தியே என கூறியுள்ளார்.

About UPDATE